சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72, பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
2024 இன்று நிறைவடையும் நிலையில், புத்தாண்டில் உயரும் போது Exp 72 குழுவினர் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண்பார்கள். சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாகப் படம்பிடிக்கப்பட்ட பல சூரிய அஸ்தமனங்கள் இங்கே காணப்படுகின்றன. pic.twitter.com/DdlvSoKo1
— சர்வதேச விண்வெளி நிலையம் (@Space_Station) டிசம்பர் 31, 2024
கடந்த ஜூன் 5-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ஆம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கு மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.