ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். நேற்றைய நாளின் முடிவில் 164-5 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஜடேஜாவும் பண்ட்டும் க்ரீஸில் நின்றனர். இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே போராட வேண்டிய நிலை இருந்தது. ஜடேஜாவும் பந்தட்டும் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருந்தனர். ஆனால், ரிஷப் பண்ட் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கன்னாபின்னாவென ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகினார். விழுந்து புரண்டு பைன் ஸ்கூப் ஆடி பைன் லெக்கில் பவுண்டரி அடிப்பது பண்ட்டின் வழக்கம். போலண்ட் வீசிய ஓவரில் முதலில் அப்படி ஒரு ஷாட்டுக்கு பண்ட் முயற்சி செய்திருந்தார். ஆனால், அதை கிளிக் ஆகவில்லை. மீண்டும் அதே ஓவரில் அப்படி ஒரு ஷட்டை ஆடினார். ஆனால், பைன் லெக்கை குறிவைத்து அவர் ஷாட் ஆட பந்து தேர்டு மேனுக்கு பறந்தது. தேர்டு மேனில் டீப்பில் நின்ற லயன் கேட்ச் பிடிக்க 28 ரன்களில் அவுட் ஆனார்