ஆன்மிகம்

விநாயகர் கோவிலில் நடைபெற்ற 108 சங்கு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!!


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.

எக்ஸ்

தீவனூர்

தீவனூர் விநாயகர் சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மார்கழிமாதசங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகம்,கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்து கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *