மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுடன் இங்கிலாந்து நாட்டின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக்ஸ் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. இவரை ரூ. 5.25 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஷ் களம் இறங்க வாய்ப்புள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து ரூ. 15.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஜோஸ் பட்லர் இணைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியில் புதிய கேப்டனாக அறிவிக்கப்படவுள்ள ரிஷப் பந்த், எய்டன் மார்க்ரமுடன் இணைந்து தொடக்க வீரர்களாக விளையாடலாம். டெல்லி கேபிடல்ஸ் அணியில் கே.எல். ராகுல் – ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் இணை ஓபனிங் விளையாட வாய்ப்புள்ளது.
சென்னை கிங்ஸ் அணியில் இந்த முறையும் தொடக்க வீரர்களில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே விளையாடுவார்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியுடன் இணைந்து பில் சால்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் தொடக்க வீரர்களில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்குவார்கள். நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரேன் மற்றும் குவின்டன் டி காக் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கலாம்
.