01
துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் பருவ கால நோய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண பரிமாற்றங்கள் செய்யும்பொழுது கவனமாக இருங்கள். பிசினஸ் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு கடந்த வாரம் நீங்கள் எடுத்த முயற்சிக்கு இந்த வாரம் பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு. அதிர்ஷ்ட எண்: 8