கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி அருகே இன்று மதியம் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் நிலஅதிர்வு காணப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி, சந்தூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது.
எனினும், நிலஅதிர்வு தீவிரமாக இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரம் திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வால் போச்சம்பள்ளி பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
விளம்பரம்
சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டதை தொடர்ந்து, பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
.