11
கும்ப ராசிக்காரர்களுக்கு சில தடைகள் ஏற்பட்டாலும் தங்களது பொறுமையின் மூலம் அனைத்தையும் சாதிப்பீர்கள். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தொழில் மற்றும் அலுவலகத்தை பொருத்தவரை அளவான வெற்றி, அளவான லாபம் என்ற விகிதத்தில் சுமூகமாக இருக்கும். அலுவலகத்தில் சில மனக்கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டாலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 12. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு