06
கன்னி: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் நிதானமும் திட்டமிடலும் முக்கியம். வீண் பேச்சும், ரோஷமும் வேண்டாம். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் தொழிலில் திடீர் மாற்றங்கள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வளர்ச்சி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானம் வேண்டாம். ரத்த நாளம், கழிவு உறுப்பு, கண் உபாதைகள் வரலாம். ஈசன் வழிபாடு இனிமை சேர்க்கும்.