தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 14-10-2024 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 17-10-2024 அன்று சூர்யன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-10-2024 அன்று செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 25-10-2024 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த மாதம் ராசியாதிபதி குரு ராசிக்கு ஆறில் வக்கிரம் பெற்று சஞ்சாரம் செய்வதால் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசிக்கு ஏழில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் வாகனங்களை ஓட்டினால் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நாள். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் மேன்மை காணப்படும். அரசியல்துறையினருக்கு காரியங்கள் வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.
மூலம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.
பூராடம்: இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.
உத்திராடம்: இந்த மாதம் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடம் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும்.
பரிகாரம்: சிவபெருமானை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய் – வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடம் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |