ஆன்மிகம்

சக்தி விகடன் – 15 அக்டோபர் 2024 – வாழ்த்துங்களேன்! திருமங்கலக்குடி ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா கோவில்


பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்ற பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டு வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துகளேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்பட்டுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை உங்கள் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனியங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

திருமங்கலக்குடி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்...திருமங்கலக்குடி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்...

திருமங்கலக்குடி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்…

15.10.24 முதல் 28.10.24 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 7.10.24

15.10.24 முதல் 28.10.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, திருமங்கலக்குடி ஸ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. மாங்கல்ய பலம் தந்தருளும் சிறப்புடையவர் என்பதாலேயே, இவருக்குக் கல்யாண வேங்கடேசர் என்பது திருநாமம். திருப்பதி வேங்கடேசப் பெருமாளின் அம்சம் என்பதால், இவரையும் `ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமி” என்று அழைப்பது, தொன்று தொட்டு வரும் வழக்கம்.

நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் அருளும் அற்புதமான இந்தத் தலத்தில், வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *