2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 10 ஆம் ஆண்டு இடமான மேஷ ராசியில் பிறந்தது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மிதுன ராசியினருக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய , ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாவது ஏற்றமான காலமாக இருக்கும். அதன், தற்போது உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, மே மாதம் 11 ஆம் தேதி இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். அக்டோபர் மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி, சுபிட்சமான காலமாக இருக்கும்.
மிதுன ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்
இது நாள் வரை மகர ராசியில் அஷ்டம சனியாக சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்போது தனது மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு ஒன்பதாமிடமாக பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கிரகங்களின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்திருந்த மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என்று எல்லாமே மிக மிக சாதகமாக இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் எதிர்கொண்டு வந்த அனைத்து சங்கடங்களும் விலகி, உங்களுக்கு சாதகமாக எல்லாம் நடக்க துவங்கும்.
நீண்ட காலமாக பதவி உயர்வு இடமாற்றம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட மாற்றங்கள் தாமதமாக வந்தாலும் இவ்வளவு காலம் காத்திருந்ததற்கு ஏற்றவாறான மாற்றத்தோடு நீங்கள் மகிழ்ச்சி அடையும்படி உங்கள் கைகளில் வந்து சேரும்.
ஏப்ரல் மாதம் வரை 10 ஆம் தேதி வீட்டில், கர்ம குருவாக சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுடைய பதினோராம் வீடான மேஷ ராசியில் லாப குருவாக பெயர்ச்சியாகிறார். 11 என்பது மூத்த சகோதரர்கள், லாபம், வளர்ச்சி, ஆகியவற்றை குறிக்கிறது.
நீங்கள் வேலை செய்யும் இடம் உங்கள் வணிகம் உங்கள் சுற்றுப்புறம் குடும்பம் என்று எல்லாவற்றிலும் இருந்த தடைகள் நீங்கி விடும். அனைவருடைய ஆதரவும் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியை உணரத் தொடங்குவீர்கள்.
-
மன இறுக்கம் குறையும்
-
நிம்மதியாக உணர்வீர்கள்
-
நல்ல வாய்ப்புகள் வரத்துவங்கும்
-
கருத்துவேறுபாடுகள் விலகும்
-
சொத்து பிரச்சனைகள் தீரும்
-
கடன் தொல்லை குறையும்
-
வருமானம் அதிகரிக்கும்
-
உடல் நலம் சீராகும்
பொதுவாக அஷ்டம சனியின் பிடி விலகுவதால், அவரவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
மிதுன ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பெரியோர், குழந்தைகள், உறவினர்கள் உடனிருந்த வாக்குவாதங்கள் சச்சரவுகள் ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். நீங்களே தேவையில்லாமல் ஏதேனும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தாமதமாகிக்கொண்டே வந்த சுப காரியங்கள் நிகழத் துவங்கும் அதற்கு ஏற்றார் போல் செலவுகளும் இருக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான தனுசு ராசியில் உங்கள் ராசி அதிபதி சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு வாழ்க்கைத்துணை, பார்ட்னர்கள் சார்ந்த விஷயங்களில் நன்மை கிடைக்கும்.
மிதுன ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை
அதே நேரத்தில் யாருடைய தவறையும் நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் செயலில் நீங்கள் நேர்மையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும், அதை சுமையா நினைக்கக் கூடாது. முகஸ்துதி நபர்கள் நிறைய பேரை சந்திப்பீர்கள் அவர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். யாரெல்லாம் முகஸ்துதி போடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிக மிக அவசியம்.
பணத்தை கையாளும் போது நிதானமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழிகளில் செல்லலாம் என்று நினைக்காதீர்கள்.
எந்த விஷயம் செய்தாலும் நிதானமாக இருக்க வேண்டும் வழிகாட்டுதல்கள் மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டாலும் அவசரமாக தடாலடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஆவணங்களைப் பற்றிய விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு: மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது பெருமாள் கோவிலில் நரசிம்ம தரிசனம் செய்து வாருங்கள். அதே போல பானகம் நைவேத்தியம் செய்து பருகி வந்தால் தடைகள் விலகி வாழ்க்கை இனிமையாகும்.
2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்
மேஷம்
|
ரிஷபம்
|
கடகம்
|
சிம்மம்
|
கன்னி
|
துலாம்
|
விருச்சிகம்
|
தனுசு
|
மகரம்
|
கும்பம்
|
மீனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .