டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் செய்தார். முன்னதாக இங்கிலாந்து வீரர் அலிஸ்டார் குக் அடித்த 33 சதங்களே இதுவரை அதிகபட்ச சதமாக இருந்து வந்தது. இதனை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்கள் அடித்து ஜோ ரூட் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 427 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், அட்கின்சன் 118 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 55.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் வெறும் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார்.
𝗧𝗵𝗲 தருணம்.
ஜோ ரூட் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த சர் அலஸ்டர் குக்கை விட முன்னேறினார் pic.twitter.com/cD5aCXl1Id
— இங்கிலாந்து கிரிக்கெட் (@englandcricket) ஆகஸ்ட் 31, 2024
டெஸ்டில் இது அவருக்கு 34 ஆவது சதமாகும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் அலிஸ்டார் குக் 33 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்த நிலையில் அதனை ஜோ ரூட் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க – பிசிசிஐ-ல் ஜெய் ஷா பெற்ற சம்பளம், ஐசிசி-ல் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதன்பின்னர் 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
.