01
மேஷம்:
இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வர வாய்ப்புள்ளது. எனினும் காதல் வாழ்க்கை மேடு பள்ளங்கள். பிள்ளைகள் மூலமாக மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தந்தைக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ளவும். முடியாமல் இருக்கும் வேலைகளை செய்து முடிப்பதன் மூலமாக பொருளாதார பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு தொற்று ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.