கலைஞருக்கு புகழாரம் முதல் பிரதமருக்கு நன்றி தெரிவித்தது வரை நாணய வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
இந்நிலையில் மாலை சென்னை வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
#ஜஸ்டின் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய விழாவில், அனைவரும் எழுந்துநின்று மரியாதை செலுத்துமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதையேற்று அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.#KalaignarCoin #கருணாநிதி #மு.க.ஸ்டாலின் #ராஜ்நாத்சிங் #News18TamilNadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/YjDq2nbU8D
— நியூஸ்18 தமிழ்நாடு (@News18TamilNadu) ஆகஸ்ட் 18, 2024
இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க : ரூ.525 கோடி மோசடி : தேவநாதனின் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைப்பு!
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி எனவும், கலைஞர் நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொல் இடம்பெற்றுள்ளது கலைஞரின் சாதனை என்றும் நாணய வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் டைட்டன் போன்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக்காத்தவர், கூட்டாட்சி தத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர் கலைஞர்” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். மேலும் இந்திய ஒருமைபாட்டுக்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்சிங் பேசினார்.
மேலும் பல பிராந்திய கட்சிகள் மறைந்தாலும் இன்று வரை திமுக பலமாக இருக்க வித்திட்டவர் கலைஞர் என்றும், வரலாற்றில் அழிக்க முடியாத சாதனைகளை புரிந்தவர் என்றும், சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றம் பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
.