2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்று 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க உள்ளது . 2024 புத்தாண்டில், கிரகங்களின் மாறும் நிலைகள் பல ராசிகளுக்கு வாழ்க்கையில் சுப பலன்களைத் தரும். இதில் எந்த ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு நன்மை தர உள்ளது என்பது குறித்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ஜோதிடர் சக்தி பாரதி கணித்துள்ளார்.
மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இதில் மேஷம் முதல் மிதுனம் வரையிலான ராசிகளுக்கு ஜோதிடர் கணித்துள்ள பலன்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
மேஷ ராசி :
பருவ வயது நபர்கள் மேற்கல்வி படிப்பார்கள். ஆனால் அதில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காது.
அதே போல காதலும் வரும். ஆனால் அதுவும் அவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்காது. குழந்தை ஜாதகரானால் தந்தைக்கு உயர்வு தரும்.திருமண வயது நபர்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கை கூடும். மனைவியின் குடும்பத்தில் கர்ம நிகழ்வுகள் நடக்கும்.
திருமணம் செய்து குடும்பமாக இருப்பவர்களுக்கு வருமானத்திற்காகவும், வேலை நிமித்தமாகவும் குடும்பத்தை விட்டு பிரிய நேரும்.வேலையில் இருப்பவர்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுக்கும்.வேலையை விட்டு சுய தொழில் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும்.சிலர் ஊதிய குறைவோ , மேலதிகாரி தொல்லையோ, வேலையாட்களின் ஒத்துழைப்பையோ சகிச்சுகிட்டு போவார்கள். ஆனால் இந்த நேரத்தில் வேலையை விட்டு வந்து விட்டால் திரும்ப வேலை கிடைப்பது கடினம் தான்.வீடு, வாசல், வண்டி வாகனம் விசயத்தில் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவர்களுக்கு ஏப்ரலுக்கு மேலே வருமான உயர்வு கிடைக்கும்.பொதுவாக இடமாற்றம் இரு முறை இருக்கும்.வெளிநாடு,மாநிலம் வெளியூர் செல்லுதல்.
மேலும் பொதுவாக எந்த வேலையில் இருப்பவர்களுக்கு நன்மை இருக்கும் என்றால் சட்டத்துறை, மருத்துவத்துறை, ஆடிட்டிங், சாப்ட்வேர், சுய தொழில் வைண்டிங், லேத், ஓர்க் ஷாப், மோட்டார், சைக்கிள் கடை இவர்களுக்கு எல்லாம் நல்லாயிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் சரியான நேரத்திற்கு சாப்பிடனும் வயிறு சார்ந்த தொந்தரவு தரும் மோசன் பிராபளம் இருக்கும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
ரிஷப ராசி:
படிப்பு மந்தம். குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்கனும்.
இளம்வயது நபர்கள் மேற்கல்வி பயிலுபவர்களாக இருந்தால் அரியர் வைத்து கிளியர் செய்வர். ஒரு தடை ஏற்பட்டு நிவர்த்தியாகும். காதல் வரும். ஆனால் அவ்விசயம் அவ்வளவு சிறப்பில்லை. தொழிலில் பிரச்சனை வரும், தொழில் இல்லாதவர்களுக்கு புதிய தொழில் அமையும்
லாபங்கள் பெரிசா இருக்கும், ஜாதகத்தில பிற அமைப்பு சரியில்லை என்றால் சரிவும் பெரிசா இருக்கும். ஏப்ரலுக்கு மேல் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும், எதிலும் கவனமான இருத்தல் நன்று. திருமணம் இல்லாதவருக்கு திருமணம் நடக்கும்
மனைவி பெயரில் தொழில் துவங்குவர், மனைவியே வேலைக்கு போவார்கள். ஏப்ரல் வரை வீடு, மனை, வண்டி வாகனம், மருத்துவ செலவு பிரச்சனை ஏற்பட்டாலும் பிரச்சனையை சமாளித்துவிடுவர்.
தாயாருக்கு ஆரோக்கிய குறைபாடு, மனக்குறைவு ஏற்படும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
மிதுன ராசி :
குழந்தைகளின் ஆரம்பக் கல்வியில் ஆவரேஜாகப் படிப்பவர்கள், மருத்துவச் செலவினமும் அவ்வப்பொழுது வரும்.
கல்லூரி படிப்பு தடை, அதில் காதல் வயப்படுதல் இருக்கும். ஏப்ரலுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம், ஏப்ரலை கடந்தால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்
வீடு, வாகனம் வாங்க தடை, தாமதம் பத்திர பதிவில் கவனம் தேவை. தொழிலில் பிரமிக்க வைப்பவர் சேமிப்பு உயர்வு ஏற்படும். வருமான தடை அவ்வபோது வரும். தாய் – தந்தை விசயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய காலம். அஷ்டமாதிபதியும் விரைய ஸ்தானத்தில் மறைவது சிறப்பே. மீடியாவில் புகழடைவர். ஆன்மீகத்தில் கரை காண்பர்.பிரிந்த நண்பர்கள் சேர்வார் என ஜோதிடர் கூறியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.