தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று.
இந்தாண்டு ஆவணித் திருவிழா, வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 23-ம் தேதி திருக்கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. 24-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமிகள், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு ரத வீதிகளில் உழவாரப் பணி நடைபெறும்.