Ind vs SA T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: நேரலை
தொடர் நாயகன் பும்ரா
உலகக்கோப்பை டி20 தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஆட்டநாயகன் கோலி
இந்திய அணிக்காக 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியுடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் விராட் கோலி.
17 ஆண்டுகளுக்கு பின்…
2007-ஆம் ஆண்டு இந்திய அணி தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் வெற்றி பெற்றது.
இந்திய அணி சாம்பியன்
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
15 ஆவது ஓவரில் 24 ரன்கள்
அக்சர் படேல் வீசிய 15 ஆவது ஓவரில் 24 ரன்கள் எடுத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்த ஓவரில் 6 சிக்சர்களை தென்னாப்பிரிக்க அணியின் கிளாசன் விளாசினார்.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 5 ஓவர்களில் 30 ரன்கள் தேவை
தென்னாப்பிரிக்கா அபாரம்
குல்தீப் யாதவ் வீசிய 14 ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா – 14 ஓவர்களில் 123/4
குவின்டன் டி காக் அவுட்
தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ரன் குவித்த குவின்டன் டி காக் 39 (31 பந்த) ரன்களில் அர்ஷ்தீப் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா 100
12 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அவுட்
21 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்திருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அக்சர் படேல் வீசிய 9 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் போல்டாகி வெளியேறினார்
கேப்டன் அவுட்
அர்ஷ்தீப் சிங் வீசிய 3 ஆவது ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்கரம் ஆட்டமிழந்தார். 3 ஆவது பந்தை எதிர்கொண்ட அவர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
எய்டன் மார்க்ரம் – 4 (5 பந்துகளில்)
ஸ்கோர் – 2.3 ஓவர் – 12/2
பும்ரா அசத்தல்
2 ஆவது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா 3 ஆவது பந்தில் தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸை போல்டாக்கினார்.
தென்னாப்பிரிக்கா பேட்டிங்
177 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
20 ஆவது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே…
கடைசி ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் ஆன்ரிக் நோர்க்கியா 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரிக்கார்ட் ஏற்படுத்திய இந்திய அணி
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் அதிகமான ரன்களை (176 ரன்கள்) குவித்த அணி என்ற ரிக்கார்டை இந்திய அணியை உருவாக்கியது.
இந்தியா 176
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.
விராட் கோலி அவுட்
யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 59 பந்துகளில் 2 சிக்சர் – 6 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்தார் விராட் கோலி.
விராட் கோலி அவுட்
யான்சென் வீசிய 19 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை சிக்சர் அடிக்க முயன்ற விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
50 ரன்கள் பார்ட்னர்ஷிப்
18.3 ஓவர்களில் விராட் கோலி – ஷிவம் துபே இணை 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர்.
18 ஆவது ஓவரில் 16 ரன்கள்
ககிசோ ரபாடா வீசிய 18 ஆவது ஓவரில் இந்திய அணி சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்கோர் 150/4
இரு அணியின் முக்கிய வீரர்கள்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தரப்பில் விளையாடும் முக்கிய ஆட்டக்காரர்கள்…
இரண்டு அசத்தலான பேட்டிங் யூனிட்டுகளுக்கு இடையே ஒரு மோதல்
இறுதிப் போட்டியில் யார் முதலிடம் பெறுவார்கள்? 🇿🇦 🇮🇳#சவிந்த் #டி20 உலகக் கோப்பை pic.twitter.com/PdrHF7AlL6
– T20 உலகக் கோப்பை (@T20WorldCup) ஜூன் 29, 2024
இந்தியாவுக்கு 11 ஆண்டுகால வறட்சி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
இந்திய அணிக்காக பிரார்த்தனை
இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராத்தனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் வெற்றிக்காக பிரயாக்ராஜின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். 🇮🇳pic.twitter.com/4AGCwdAr0b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) ஜூன் 29, 2024
ஜெய் ஷா வாழ்த்து
இந்திய அணி வெற்றி பெற பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்காக பிரயாக்ராஜின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். 🇮🇳pic.twitter.com/4AGCwdAr0b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) ஜூன் 29, 2024
இந்திய அணி பிளேயிங் 11
அரையிறுதியைப் போன்று இன்றைய இறுதிப் போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்-
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
இந்திய அணி தயார்….
ஆடுகளம் தயார்
போட்டி நடைபெறவுள்ள பார்படாஸ் ஆடுகளம் தயார் நிலையில் உள்ளது.
நெருக்கடியில் தென்னாப்பிரிக்கா
உலகக்கோப்பை தொடரில் இதுவரை இறுதிப் போட்டியில் விளையாடாத அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது. இது அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
களத்தில் விராட் கோலி
இந்திய அணி தடுமாற்றம்
4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து தடுமாறியுள்ளது இந்திய அணி.
கடந்த போட்டிகளில் சுமாராக விளையாடிய விராட் கோலி 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணியில் மாற்றம் இல்லை…
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.
இன்று விளையாடும் இந்திய அணி
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணி பேட்டி
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்
இந்திய அணி ஆலோசனை
தென்னாப்பிரிக்க அணி
குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிலாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி
டாஸை இழந்த தென்னாப்பிரிக்க அணி
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கை தேர்வு செய்திருப்போம் என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம்…
டாஸ் வென்றால் கோப்பை நிச்சயம்?
2010 ஆம் ஆண்டு முதல் டாஸ் வென்ற அணிகள் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இன்றைக்கும் அந்த மேஜிக் தொடருமா என்று எதிர்பார்த்துள்ளனர் இந்திய அணியின் ரசிகர்கள்…
மிக மெதுவாக விளையாடிய கோலி
48 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. இன்று 3 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில், அதிரடியாக அவர் ரன் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
விராட் கோலிக்கு முதல் 50
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் 50 ரன்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.
72 ரன்கள் பார்ட்னர்ஷிப்
4 ஆவது விக்கெட்டிற்கு அக்சர் படேலும் – விராட் கோலியும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அலட்சியத்தால் அக்சர் படேல் விக்கெட்டை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
4 சிக்சர் அடித்த அக்சர்
31 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் அவுட்
அக்சர் படேல் ரன் அவு முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
அக்சர் படேல் சிக்சர்
கோலி – அக்சர் படேல் பார்ட்னர்ஷிப்
4 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த விராட் கோலி – அக்சர் படேல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தற்போது வரை இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
10 ஓவர்களில் 75 ரன்கள்
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் முதல் சிக்சர்
தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் வீசிய 8 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை சிக்சருக்கு விளாசினார் அக்சர் படேல்…
தடுமாறும் இந்திய அணி
பவர்ப்ளேயான 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளனர்.
ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்துள்ளனர்.
பவர்ப்ளேயில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.
5 ஓவர்கள் முடிவில்….
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் அவுட்…
4 போட்டிகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், பந்து வீச்சாளர் சூர்யகுமார் யாதவ், ககிசோ ரபாடா பந்து வீச்சில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Ind vs SA T20 World Cup Final : மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?
Ind vs SA T20 World Cup Final: இரு அணிகளின் பலம் – பலவீனங்கள் என்ன?
நேருக்கு நேர் – எத்தனை போட்டிகளில் வெற்றி?
இதுவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா 26 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் ரத்தாகியுள்ளது.
தொடர்ந்து சொதப்பும் இந்திய வீரர்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. அதன் நேரடி ஸ்கோர்களை தெரிந்துகொள்ள நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்.
- முதலில் வெளியிடப்பட்டது: