கிரிக்கெட்

Ind vs SA T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

விளம்பரம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

வானிலை நிலவரம்:

பார்படாஸ் மைதானத்தில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் போட்டியின்போது 33% – 56% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வரும் பட்சத்தில் நாளை (ஜூன் 30) ​​ரிசர்வ் டே-வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

பிட்ச் எப்படி இருக்கும்?:

மேலும் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை வேகப்பந்துவீச்சாளர்கள் 7.88 என்ற எக்கனாமியுடன், 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

நமிபியா – ஓமன் அணிகள் விளையாடிய அதே பிட்ச் தான் தற்போது பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் இரு அணிகளும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து, நமிபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டேவிட் வைஸ் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

மேலும் இங்கிலாந்து – ஸ்காட்லேண்ட் போட்டியிலும் இதே பிட்ச் தான் பயன்படுத்தப்பட்டது. அந்த போட்டியில் ஸ்காட்லேண்ட் வீரர்கள் 10 ஓவரில் 90 ரன்களை விளாசினர். எனவே இந்த பிட்ச் பேட்டிங்கிற்கும் சாதகமான ஒன்று தான் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க:
11 ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்லாத இந்திய அணி..

நேருக்கு நேர்:

இதுவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா 26 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் ரத்தாகியுள்ளது.

விளம்பரம்

இந்திய அணி:

இந்திய அணியைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுவர்.

இதையும் படிக்க:
T20 World Cup Final : இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

தென் ஆப்பிரிக்கா அணி:

தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை, குயின்டன் டி காக் (வி.கீ), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

சாதகமான 11:

குயின்டன் டி காக், ஹைன்ரிச் கிளாசென், ரோஹித் சர்மா (துணை.கே), டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா (கே), அக்சர் படேல், மார்கோ ஜான்சன், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ககிசோ ரபாடா ஆகியோர் சிறப்பாக விளையாடுபவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *