கிரிக்கெட்

நானா ஃபார்ம் அவுட்..? அதிரடி ஆட்டத்தால் விமர்சகர்கள் வாயை மூடிய விராட் கோலி


டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 76 ரன்கள் எடுத்ததன் மூலம், முக்கிய போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்களை எடுத்து நம்பிக்கையான வீரர் என மீண்டும் நிரூபித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடர் முழுவதும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், இறுதிப்போட்டியில் விராட் கோலி 76 ரன்களை குவித்தார்.

விளம்பரம்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், விராட் கோலி – அக்சர் படேலுடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த பாட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. அக்சர் பட்டேல் தனது விக்கெட்டை இழந்தவுடன், விராட் கோலி ஷிவம் துபேவுடன் இணைந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து விராட் கோலி 76 ரன்கள் எடுத்த போது ஜான்சன் பவுலிங்கில் ரபாடாவிடன் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரின் இந்த ஆட்டத்தின் மூலம், விராட் கோலியின் மோசமான பார்மை அவர் முடித்து வைத்திருக்கிறார்.

விளம்பரம்

முக்கிய போட்டியில் பல வீரர்கள் சொதப்பும் நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதியில் 44 பந்துகளில் 72 ரன்களையும், இறுதிப்போட்டியில் 58 பந்துகளில் 77 ரன்களையும் விராட் கோலி எடுத்துள்ளார்.

மேலும் 2016ஆம் ஆண்டு அரையிறுதியில் 47 பந்துகளில் 89 ரன்களும், 2022ஆம் ஆண்டு அரையிறுதியில் 40 பந்துகளில் 50 ரன்களும், தற்போது நடைபெற்ற இறுதிப்போட்டியில் 59 பந்துகளுக்கு 78 ரன்களும் எடுத்து முக்கிய போட்டியில் விளையாடும் அதிரடியான வீரர் என்ற பெயரைப் பதிவு செய்துள்ளார்.

விளம்பரம்

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *