உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை உருவாக்கியது இந்தியா..
உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும் வெளியேறிய இந்திய அணி, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.
இதன்பின்னர் இணைந்த அக்சர் படேல் – விராட் கோலி இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருந்த அக்சர் படேல், 31 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி – ஷிவம் துபே ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த டி20 போட்டிகளில் புதிய சாதனையை உருவாக்கியது இந்திய அணி. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
.