கிரிக்கெட்

இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்


டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

விளம்பரம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஆடுகளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் எதிரணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

விளம்பரம்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரையிறுதியில் களமிறங்கிய அதே அணியை தான் ரோஹித் சர்மா மீண்டும் இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். பவர் பிளேயில் பந்துகளை பறக்க விட்டு, எதிர் அணிகளை ஆரம்பத்திலேயே பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்பாக இருந்து வருகிறார். கடந்த 2 போட்டிகளில் அவர் அடித்த அரை சதங்கள், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வெளியேற்ற உதவியது. மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி கடந்த 7 போட்டிகளில் வெறும் 75 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் பங்களிப்பை வழங்கினார், இந்திய அணி கோப்பையை முத்தமிடலாம்.

விளம்பரம்

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை இறுதி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யாருக்கு கோப்பை?

தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் : ஐடன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் தொடர்ச்சியாக 8 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். மொத்தம் 204 ரன்கள் எடுத்துள்ள அவர், 200க்கும் அதிகமாக குவித்த வீரராக வலம் வருகிறார்.

விளம்பரம்

ஆடுகளத்தின் நிலவரம் : கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் சிலர் நல்ல ரன்களை குவித்து இருந்தாலும், இது பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் என்று கூற முடியாது.

வானிலை நிலவரம் : கரீபியன் தீவுகளில் தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால், பிரிட்ஜ்டவுனில் வானிலை நிலவரம் சாதகமாக இல்லை. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்கள் முழு போட்டியையும் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விட்டுவிட்டு மழை, இடியுடன் கூடிய மழை இருக்கும் என்பதோடு, மேகமூட்டம் மற்றும் கிழக்கு திசை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

நேரலை ஒளிபரப்பு : இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 29) இரவு 8 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *