உலகம்

12ஆவது குழந்தைக்கு தந்தை… உண்மையை போட்டுடைத்த எலான் மஸ்க் !


டெஸ்லா ஓனர் எலான் மஸ்குக்கு ரகசிய குழந்தை பிறந்ததாக செய்தி வெளியான நிலையில், உங்களுக்குதான் அந்த ரகசியம், எனக்கில்லை என எலான் மஸ்க் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் ஓனரான எலான் மஸ்க் ஈ.ஐ. மனிதனின் மூளையை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் Neuralink போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவு துறையில் கலக்கி வரும் ChatGpt-யை உருவாக்கியவர்களில் ஒருவரான மாஸ்க் பின்னர் அதிலிருந்து விலகிவிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தும் மாஸ்க், உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்து வருகிறார்..

விளம்பரம்

அதை தனது சொந்த வாழ்க்கையிலும் செயல்படுத்தி வருவதிலும் மாஸ்க் தவறவில்லை. ஜஸ்டின் வில்சன் என்பவரை முதலில் மணந்த மஸ்க்கு 2002 ஆம் ஆண்டு பிறந்த குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து ஜஸ்டின் வில்சன் மூலம் மஸ்க்குக்கு 2004 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மஸ்க்கு Kai, Saxon, Damian ஆகிய 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன.

2008 ஆம் ஆண்டு வில்சனை விவாகரத்து செய்த மஸ்க், ரிலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் அவர் மூலம் மாஸ்க் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கனடாவைச் சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் உறவுமுறையில் மாஸ்க் இருந்தார். இவர் மூலம் 3 குழந்தைகளுக்கு தந்தையானார். இதுதவிர தனது Neuralink Executive Shivon Zilis மூலம் இரட்டை குழந்தைக்கு தந்தையானார்.

விளம்பரம்

Shivon Zilis தற்போது 3வது குழந்தையை பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மாஸ்க் 12 ஆவது தந்தை முறையாக கூறப்பட்ட நிலையில், ரகசிய குழந்தையா என கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கம்போல் தனது கிண்டலான முறையில் பதில் அளித்துள்ள மாஸ்க். உங்களுக்குதான் அந்த ரகசியம், எனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் அது ஏற்கனவே தெரியும் என அதிர வைத்தார்.

வறுமையின் நிறம் சிவப்பு முதல் விக்ரம் வரை OTT-யில் பார்க்கவேண்டிய 9 சிறந்த கமல்ஹாசன் படங்கள்.!

வறுமையின் நிறம் சிவப்பு முதல் விக்ரம் வரை OTT-யில் பார்க்கவேண்டிய 9 சிறந்த கமல்ஹாசன் படங்கள்.!

மக்கள்தொகை சமநிலை நீடிக்க, ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற வேண்டும் என மாஸ்க் வலியுறுத்தும் நிலையில், அதைவிட 6 மடங்கு குழந்தைகளைப் பெற்று முன்மாதிரியாக திகழ்கிறார் என்று குறிப்பிடலாம்.

விளம்பரம்

செய்தியாளர்: பெர்லின் மோசஸ்

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *