பஞ்சாப் அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்ற நிலையில், அந்த அணியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ரியான் பராக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணியில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதா இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டி தேர்வு செய்யப்பட்டது. தொடக்க யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழக்க கோலர் கேட்மோர் மற்றும் கேப்டன் சாம்சன் தலா 18 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய அஷ்வின் 28 ரன்கள் சேர்த்தார்.
துருவ் ஜுரெல் ரன் ஏதும் எடுக்காமலும், ரோமன் பவெல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
.