பகத் பாசில் பட பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரீல்ஸ் ஏற்பாடு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பிரபலம் அடைந்ததில் இருந்து ரீல்ஸ் செய்யும் ஆர்வம் சிறுவர் முதல் முதியோர் வரை அதிகரித்து வருகிறது. ஹிட்டான பாடல் அல்லது வசனங்களுக்கு நெட்டிசன்கள் நடித்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.
பிரபலங்களும் ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலங்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்ற படம் வெளிவந்தது. இந்த படத்தில் உள்ள பாடலுக்கு தற்போது பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
இணைந்து பந்துவீச்சு ஆவேசம்! 🫂🙌#விசில் போடு #மஞ்சள் 🦁💛
🎶: கரிங்கலியாளே/ பிளாக்ப்ரோ pic.twitter.com/vmNYC1ob7U— சென்னை சூப்பர் கிங்ஸ் (@ChennaiIPL) மே 1, 2024
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பத்திரனா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் ஆவேசம் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
.
- முதலில் வெளியிடப்பட்டது: