பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
சால்ட் 6 சிக்சர் 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சுனில் நரேன் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இருவரும் முதல் விக்கெட்டிற்கு 10.2 ஓவர்களில் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அடுத்து வந்தவர்களில் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்னும், ரஸல் 24 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் சேர்த்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.
.