திரையுலகில் பல திரைப்படங்கள் நடித்தாலும் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ்நடித்தசலார் பாகம் 1உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இதனை அடுத்து மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்குகளில் 1 திரைப்படம் வெளியாகி உள்ளது.
கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் பிரஷாந்த் நீல்இயக்கத்தில் பிரபாஸ்ஹீரோவாக நடித்து (டிச-22,) வெளிவந்துள்ள திரைப்படம் சலர் பாகம்1 .இப்படத்தில் பிரபாஸ் உடன்பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ்,பாபி சிம்ஹா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப்படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டை, காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பு, அன்பறிவு மாஸ்டரின் சண்டை காட்சிகள், படத்தின் பின்னணி இசை படத்தொகுப்பு கனகச்சிதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பிரபாஸின் மாஸ் கம் பேக், சண்டை காட்சிகள் அனைத்துமே வெறித்தனமாக உள்ளதாகவும். சலார் படத்தின் 2ம் பாகத்திற்கு காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.