லைகா தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். காமெடி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் கூறும்போது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் விரும்பும் படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- முதலில் வெளியிடப்பட்டது: