தென்காசி
மாவட்ட ரசிகர்கள் சந்திரமுகி – 2 திரைப்படம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய திரைப்படம் சந்திரமுகி. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று (செப்.28) வெளியாகி இருக்கிறது.
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தையும் இயக்குனர் பி. வாசுவே இயக்கி இருக்கிறார்.
முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்த நிலையில், இந்த பாகத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்து, ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி இசையமைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி சங்கர் தியேட்டரில் சந்திரமுகி 2 படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை கேட்டோம். அதற்கு பலரும் படம் நன்றாக இருந்தது என்று கூறினார். அதேவேளை, பேய் படம் என்றாலும் பயமாக இல்லை என்றும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.