திருநெல்வேலி
மாவட்டத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர்.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராம் முத்துராம் திரையரங்கில் காலை 9:00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் முடிந்த பிறகு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்கள், “தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் சந்திரமுகியும் ஒன்று. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ரிலீசான படத்தை பி வாசு இயக்கி இருந்தார்.
மேலும் நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, நாசர், வடிவேலு, வினீத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாகவும், கங்கனா ரனாவத் சந்திரமுகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. பயம் வரும் காட்சிகள் முதல் பாகத்தை விட அதிகமாக உள்ளன முதல் பாகத்தை விட நன்றாக உள்ளது நடிகர்கள் இதில் சிறப்பாக தங்களது திறமையை காட்டி உள்ளனர். வடிவேலு காமெடியில் அசத்தியுள்ளார். குடும்பத்தோடு இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம்” என.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.