நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெய்லர் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ஜெய்லர் படம் புதிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அது உண்மையாகி வருகிறது. பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் மூலமாக வசூல் நிலவரமானது வெளிவரத் துவங்கியுள்ளது.
அதில் திருப்பூர் மாவட்டத்தில் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஜெய்லர் திரைப்படம் முதல் நாள் அரங்கு நிறைவு காட்சிகளாகவே ஓடியது. இதன் காரணமாக மிகப்பிரமாண்டமான வசூல் இருக்கும்எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தினுடைய வசூல் முதல் நாளில் மட்டும் 2 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜெய்லர் திரைப்படம் பல புதிய சாதனைகளை படைக்கும் என சினிமா விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- முதலில் வெளியிடப்பட்டது: