ரஜினிகாந்த் நடிப்பிலும் நெல்சன் இயக்கத்திலும், இசை அமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெய்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பதிலளித்துள்ளனர்.
ஜெய்லர் திரைப்படம் :
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் ஜெய்லர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், யோகிபாபு, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெய்லர் படத்தை தேனி மாவட்டத்தில் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் குறித்த கேள்விக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
ஜெயிலர் வெளியாகும் முன்பிருந்து யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கிளம்பி வந்தது. ஜெய்லர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. பல்வேறு பகுதிகளில் யார் சூப்பர் ஸ்டார் என்றும் , தமிழகத்தின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் பேசப்பட்டு வந்தது .
இந்த சூழலில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் ஜெய்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பல்வேறு சுவாரசியமான பதிலைக் கூறியுள்ளனர் .
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திரைப்படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள், எப்போதும் ரஜினிகாந்த் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் என்றும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கு ஒரே சூப்பர் ஸ்டார் தான் இருக்க முடியும். அது ரஜினிகாந்த் தான் என ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டில் ஜெய்லர் திரைப்பட கொண்டாட்டம்… ஆண்களுக்கு நிகராக டான்ஸ் ஆடிய பெண் ரசிகைகள்
சூப்பர் ஸ்டார் பட்டத்தை கேட்டு வாங்க முடியாது. மக்கள் தான் பட்டத்தை அளிக்க வேண்டும். மக்கள் ஒரே ஒருவருக்கு தான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்துள்ளனர். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று.
.