பல வகையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த நடிகர் சூரி வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்ட இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம்.நடிகர் சூரி சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து அதன் பின் தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக நிலைத்து நின்றவர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது.
சூரிக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கொடுத்தது நடிகர் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் தான்.திரையில் எங்கோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த சூரி அதன் பின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அத்தனை ஹீரோக்களின் படங்களிலும் காமெடியாக நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் இவருக்கு காமெடியே வராது, இவர் பண்ணுவதெல்லாம் காமெடியா என்று பல நேரங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.
இனி சூரியே நினைத்தாலும் காமெடியாக நடிக்க முடியாத அளவிற்கு அவருக்கு ஹீரோ வாய்ப்புகளும் குவிய தொடங்கி விட்டன. சூரி அடுத்தடுத்து கொட்டுக்களி, ஏழுமலை ஏழு கடல் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூரியை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவருமே சூரியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக அவருக்கு துணையாக நிற்கிறார்கள். இனி சூரி ஹீரோவாக மட்டுமே தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.