திரைவிமர்சனம்

அபர்ணா தாஸ் கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ்.. – News18 தமிழ்


லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் ஜேம்ஸ் மூவிஸ் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தைப் பற்றி தஞ்சையில் பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம்.

கதை சுருக்கம் :

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான மணிகண்டனும், சிந்துவும் தற்செயலாக பெற்றோராகிறார்கள். சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிக்கின்றனர், மணிகண்டன் தனது குழந்தையான ஆதித்யாவை ஒற்றை பெற்றோராக வளர்க்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனை படத்தின் மீதி கதை.

விளம்பரம்
டாடா

பொதுமக்களின் கருத்து :

அபர்ணா தாஸ் மற்றும் கவின் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ். VTV கணேஷ், பிரதீப் ஆண்டனி இவர்களின் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது. லிவிங் டூ கெதரில் உள்ள ஒரு காதலர்களைப் பற்றிய படமாக உள்ளது. மிக அருமையாக உள்ளது என்றும், சென்டிமென்ட் சீன் நல்லாவே வொர்க் அவுட் ஆகிருக்கு. கண்டிப்பா வெற்றி பெரும் என்றும் பெரும்பாலானோர் ஒரே மாதிரியான நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *