மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கல்கியின் நாவலுக்கு இணையாக இருக்கிறதா என பார்க்கலாம். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவர்களின் உதவியுடன் மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களும், படிக்காதவர்களும் மிகுந்த எதிர்பார்த்து காத்திருந்தனர். கதை பலருக்கும் தெரியும் என்பதால் அதற்குள் அதிகம் செல்ல வேண்டாம். 10-ம் நூற்றாண்டு கதை, சோழர்களின் ஆட்சி, நந்தினியின் சதி, பதவி ஆசை, பாண்டியர்களின் பழி…
Month: September 2022
செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணியின் தவறவிடக்கூடாத மற்றொரு படம் – News18 தமிழ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். இந்த கூட்டணிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களையும் வெகுஜன சினிமா ரசிகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தும் விதமாகவே நானே வருவேன். ரெட்டை சகோதரர்களான பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டை வேட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். சிறு வயதிலேயே லேசாகப் பிறந்த மனம் கொண்ட கதிரை அடித்து உதைக்கிறார் கண்டிப்பான பள்ளி ஆசியரான தந்தை. கதிர் ஒரு கட்டத்தில் தந்தையைக் கொலை செய்கிறான். சமூகத்திடமிருந்து அந்த…
அருண் விஜயின் சினம் படம் விமர்சனம்! – News18 தமிழ்
அருண் விஜய் நடிப்பில் சினம் திரைப்படம் வெளியாகியுள்ளது. போலீஸ் கதையில் வந்துள்ள அந்தப் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். நடிகர் விஜய் குமார் தயாரிப்பில் அவருடைய மகன் அருண் விஜய் நடித்திருக்கும் படம் சினம். இந்தப் படத்தை ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். சமூகத்தில் நடக்கும் தவறுகளை அரசின் முயற்சியால் மட்டும் தடுக்க முடியாது. மக்கள் தவறுகளை தட்டிக்கேட்க வேண்டும்! தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சினம் படத்தை எடுத்துள்ளனர். இந்த கதையை நேர்மையான, துடிப்பான துணை காவல் ஆய்வாளர்…
புரட்டாசி 2022 – எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.! – News18 தமிழ்
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் மற்றும் தமிழ் ஆண்டு பிறப்பு கணக்கிடப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஆறாவது மாதமான புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை தனது சொந்த வீடான சிம்ம ராசியில் ஆட்சியாக இந்த சூரியன் தற்பொழுது புதனின் வீடான கன்னிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று இருந்தாலும், வக்கிரமாகி அமர்ந்துள்ளார். இதைத் தவிர, வேறு எந்த பெரிய…
ஆர்யாவின் கேப்டன் படம் எப்படி இருக்கிறது? – News18 தமிழ்
ஆர்யா தயாரித்து நடிக்கும் கேப்டன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். டெடி திரைப்படத்திற்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் – ஆர்யா கூட்டணியில் உருவாகிய படம் கேப்டன். இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார் ஆர்யா. அவருடன் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மூன்று நாடுகள் எல்லையில் இருக்கும் காட்டுப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. அந்த பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள்…