சினிமா விமர்சனம்

தனுஷின் திருசிற்றம்பலம் படம் விமர்சனம்! – News18 தமிழ்


தனுஷ் நடித்திருக்கும்
திருச்சி
ற்றம்பலம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? படம் சொல்லும் விஷயம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் கூட்டணியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இதில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இரண்டு நண்பர்கள்! அவர்களுக்கு இடையேயான நட்பு, காதலாக மாறுகிறதா? இல்லையா? என்பதை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்பதில் இயக்குநர் கவனமாக இருக்கிறார்.

விளம்பரம்

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் கதை. தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ்ராஜ், மகன் தனுஷ், தோழி நித்யா மேனன். ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.
பிரச்னைகளை கண்டாலே பயப்படும் தனுஷூம், நித்யா மேனனும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.

மேலும் படிக்க…
தனுஷின் திருசிற்றம்பலம் படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்!

உணவு டெலிவரி செய்யும் தனுஷ், உயர் அந்தஸ்தில் இருக்கும் ராசி கண்ணாவை காதலிக்கிறார். அதற்கு நித்யா மேனன் உதவி செய்கிறார். ஆனால் அவரின் காதல் தோல்வியில் முடிகிறது.

விளம்பரம்

அதே போல் கிராமத்து பெண்ணான பிரியா பவானி சங்கரை திருமணம் செய்ய நினைக்கிறார். அதுவும் நடக்கவில்லை. இறுதியில் தோழியையே கை காட்டுகிறார் தனுஷின் தாத்தாவான பாரதிராஜா. அதற்கு பிறகு என்ன ஆனது என்பது Climax.

இந்த சம்பவங்களில் இடம்பெறும் பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் திரைக்கதை நகர்கிறது. ஒரு நடுத்தர குடும்பத்தை அப்படியே கண்முன் நிறுத்த முயற்சித்துள்ளனர்.

மேலும் படிக்க…
நடிகை பிரியா பவானி சங்கரின் கியூட் ஆல்பம்!

அப்பா மீது வெறுப்பை காட்டும் மகன். மகனையும் பேரனையும் இணைக்க நினைக்கும் தாத்தா. இந்த கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ் ஆகியோர் அத்தனை கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

விளம்பரம்

பாரதிராஜா பேசும் வசனங்களும், அவரின் நடிப்பும் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக தனுஷ் எழுதும் கவிதைக்கு அவர் கொடுக்கும் Counter வசனத்திற்கு திரையரங்கு முழுவதும் சிரிப்பலை கேட்கிறது.

இதன் மூலம் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை பாரதிராஜா பூர்த்தி செய்துள்ளார். மேலும் தனுஷ் – நித்யா மேனன் போன்ற நண்பர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என பலர் நினைக்கலாம்.

மேலும் படிக்க…
நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்!

திருச்சிற்றம்பலம் படத்தில் சண்டைக்காட்சிகள் கிடையாது. அழகான ஒளிப்பதிவும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
இந்தப் பிரச்னை படத்தில் எதிர்கொள்ளப் பயப்படும் தனுஷ், அப்பா மீது மட்டும் அத்தனை கோபம் காட்ட காரணம் என்பதற்கு இந்த அழுத்தமான காட்சிகள் இருந்திருக்கலாம்.

விளம்பரம்

ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் தலா மூன்று காட்சிகளில் மட்டுமே தலை காட்டி செல்கின்றனர். மேலும் சில சமயம் படம் சற்று நீளமாக செல்கிறதோ என்ற எண்ணத்தை கொடுக்கிறது. படத்தின் பின்னணி இசை ரசிக்க வைத்தாலும், அது அனைத்தும் தனுஷ் – அனிருத் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களின் இசையை நினைவூட்டுகிறது.

வழக்கமான கதையை சுயரஸ்யமாக எடுத்து ஒரு Feel Good Movie என சொல்ல வைத்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் திருச்சிற்றம்பலத்தை ரசித்து திரும்பலாம். படம் என்றால் பல திருப்பங்களுடன் திரைக்கதை இருக்க வேண்டும், ஆக்ஷன் அதிரடி கமர்ஷியல் பார்முலா இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்.

விளம்பரம்

@ Google செய்திகளைப் பின்தொடரவும்:
கூகுள் செய்திகள்
பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *