வேத ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ராசியான ரிஷபத்தில் இருந்து மூன்றாவது ராசியான, மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆனி மாதப் பிறப்பைக் குறிக்கும். ஜாதக கட்டத்தில், பெரும்பாலும் சூரியன் மற்றும் புதன் அருகருகில் அல்லது அடுத்த ராசிகளில் அமர்ந்திருப்பார்கள். இதன் மூலம் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் தோன்றும். சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் இருந்து சூரியன் புதனின் வீடான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. ஆனி மாதம் முழுவதும், அதாவது ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.
தனுசு ராசிக்கு சோதனையான காலம்
இது நாள் வரை 6 ஆம் தேதி வீட்டில் சாதகமாக சஞ்சரித்த சூரியன், தற்போது களத்திர மற்றும் கூட்டு முயற்சி ஸ்தானமான 7 ஆம் வீட்டிற்கு செல்வதால், இந்த காலகட்டம் கொஞ்சம் சோதனையாக இருக்கும். வீட்டில், வாழ்க்கைத்துணையிடம் மற்றும் பார்ட்னர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். விட்டுக் கொடுப்பதும், தள்ளிப் போடுவதும் சிறந்த தீர்வாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வரலாம்.
மகர ராசிக்கு ஏற்றமும் இறக்கமும்
6 ஆம் வீட்டில் சூரியனால் உகந்ததாக இருந்தாலும் இரண்டில் சனி மற்றும் மூன்றில் இருக்கும் குருவால் பொருளாதார நெருக்கடி மற்றும் தேவை இல்லாத வாக்குவாதம் ஆகியவை ஏற்படும். கருத்து வேறுபாடுகளை பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும், முன்கோபத்தை குறைக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு செயல்பட வேண்டும். நெருக்கடியான பொருளாதார சூழ்நிலை காரணமாக தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். உடல் ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். இருப்பினும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது சாதகமான காலம். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
வழிபட வேண்டிய தெய்வம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வாழபட்டு வரலாம்.
இதையும் படியுங்கள்:
கால சர்ப்ப தோஷத்தால் திருமண தடை, தாமதங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள்
கும்ப ராசிக்கு பொன் பொருள் சேரும்
கும்ப ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாகும் சூரியனால் மத்திமமான பலன் தான் என்றாலும் இரண்டாம் வீடான மீனத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு மற்றும் மூன்றில் ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் உகந்த பலன்களைத் தருகின்றன. பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வீடு மனை வாங்கும் திட்டம் இருப்பவர்களுக்கு இந்த மாதம் கை கூடி வரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி ஒற்றுமை சிறக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரங்கள் தேடி வரும். குழந்தைகள் வழியாக நல்ல செய்தி கிடைக்கும். தேவையில்லாத பயணத்தின் மூலமாக உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படலாம். எனவே பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம்.
வழிபட வேண்டிய தெய்வம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வாழபட்டு வரலாம்.
இதையும் படியுங்கள்:
குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடுமா?
மீன ராசி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்
இந்த மாதத்தில் நான்காம் வீட்டில் பெயர்ச்சியாகும் சூரியனால் அனுகூலமாக இருந்தாலும் ஜென்மகுரு ராசியிலேயே இருப்பது மற்றும் ஏழரை சனியாக, சனி 12ல் இருப்பது, நீங்கள் எதிலும் நிதானமாக கவனத்துடன் செயல்பட வேண்டும். எல்லா இடத்திலுமே அதிக பொறுப்புகளும் வேலைப்பளுவும் இருப்பது போன்றே தோன்றலாம். தேவையில்லாத விஷயங்களுக்கு வாக்குவாதம் . பண வரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகளும் அதற்கு ஏற்றார் போல இருக்கும். எனவே சிக்கனமாகவும், திட்டமிட்டும் செலவு செய்வது கடன்களைத் தவிர்க்க உதவும். செரிமான கோளாறு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக, உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் போட்டி ஏற்பட்டாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும்.
வழிபட வேண்டிய தெய்வம்: செவ்வாய் மற்றும் வெள்ளியன்று துர்க்கை வழிபாடும், வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், இன்னல்களைத் தீர்க்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .