சிம்ம ராசிக்கு நிதானம் தேவை : சிம்ம ராசிக்கு உங்கள் ராசியின் அதிபதியான சூரியன் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே, அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சிறுசிறு சண்டைகள் தோன்றலாம். பேச்சில் முன்கோபம் மற்றும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். மேலும், உங்களுக்கு சம்மந்தம் இல்லாத எந்த விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம். வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், நீங்கள் எளிதில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள். ஞாயிறன்று சூரிய பகவானை வேண்டுவது தடைகளை விலக்கும்.
கன்னி ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
உங்கள் ராசிக்கு அதிபதியான புதனின் மற்றோரு வீடான மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சியாவது சாதகமான பலன்களைத் தரும். உங்கள் வீடு, பொது இடம் மற்றும் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இவை அனைத்தையும் கடந்து பண வரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். சுப காரியங்களுக்கு இருந்த தடைகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரம், தொழில் மற்றும் கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு குறைவதோடு நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றம் ஆகியவை.
வழிபட வேண்டிய தெய்வம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி கோவிலில் வழிபாடு செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்:
‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
துலா ராசிக்கு பொருளாதார நெருக்கடி விலகும்..
கடந்த சில வாரங்களாக சூரியன் உங்கள் எட்டாம் வீட்டிலும் குரு ஆறாம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். தற்பொழுது சூரியன் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அதுவும் புதன் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி விலகி நீங்கள் எதையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஏற்ற இறக்கமாக இருந்த பண வரவு தற்பொழுது சீராகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கத் துவங்கும். இருப்பினும் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் வரும் காலமென்பதால் தேவையில்லாத மற்றும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தொழில் மட்டும் வியாபாரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறதோ அதையே தொடர்ந்து செய்யுங்கள் தேவையில்லாமல் அகலக்கால் வைப்பது அல்லது புதிய தொழில் தொடங்குவது என் உள்ளிட்ட விஷயங்களை சில வாரங்களுக்கு தள்ளி போடலாம்.
வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான் மட்டும் அம்பிகை வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பம் மற்றும் தொழில் தடைகள் நீங்கி விருத்தி அடையும்
இதையும் படியுங்கள்:
திருமண யோகங்கள்: யாருக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடக்கும்?
விருச்சிக ராசிக்கு சுப காரியங்கள் நடக்கும்..
ஆனி மாதம் முழுவதும் விருச்சிக ராசியினருக்கு சாதகமாக உள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும், மன நிம்மதி ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறைய துவங்கும். சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வாக்குவாதங்கள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது போல் தோன்றலாம் ஆனால் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிரிகள் காணாமல் போவார். எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவதால் நீங்கள் கடின உழைப்பை மேற்கொண்டால் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் உயர் பதவிகளை அடைய முடியும்.
வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் மற்றும் சனி பகவான் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வது வாழ்வில் முன்னேற்றங்கள் அடைய உதவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .