வேற ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ராசியான ரிஷபத்தில் இருந்து மூன்றாவது ராசியான, மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆனி மாதப் பிறப்பைக் குறிக்கும். ஜாதக கட்டத்தில், பெரும்பாலும் சூரியன் மற்றும் புதன் அருகருகில் அல்லது அடுத்த ராசிகளில் அமர்ந்திருப்பார்கள். இதன் மூலம் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் தோன்றும். சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் இருந்து சூரியன் புதனின் வீடான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. ஆனி மாதம் முழுவதும், அதாவது ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.
மேஷ ராசிக்கு பொருளாதார நெருக்கடி
ஆனி மாதம் மேஷ ராசியினருக்கு இரண்டாம் வீட்டில் இருந்த சூரியன் மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். ஆனால் இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியின் பன்னிரெண்டாம் வீடு அதாவது விரைய ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவுகள் கவனிக்கப்பட வேண்டும். பணம் மற்றும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரமாக எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் ஜிம் தேவையில்லாத செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தொழில் வேலை வியாபாரம் ஆகியவற்றில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். ஆனால் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு பொருளாதார உயர்வைத் தரும்.
ரிஷப ராசிக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும்
கடந்த ஒரு மாத ராசியிலேயே இருந்த சூரியன் தற்போது இரண்டாம் வீட்டிற்கு செல்வது மற்றும் 11ல் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 6ல் கேது ஆகிய அனைத்துமே உங்களுக்கு சாதகமான பலன்களை குடுக்கும். இந்த மாதம் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் மாதமாக இருக்கும். புதிய முயற்சிகளை தயக்கமின்றி தொடங்கலாம். கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும். தன வரவுகள் லாபம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வேலையில் போட்டி காணப்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது.
வழிபட வேண்டிய தெய்வம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி ஆலயத்திற்கு வணங்கி வெள்ளை நிற வஸ்திரம் மற்றும் தாமரை பூக்களால் அர்ச்சனை செய்து வருவது மேன்மையை தரும்.
மிதுன ராசிக்கு வேலை வணிகத்தில் கவனம் தேவை
மிதுன ராசியினருக்கு ராசியிலேயே சூரியன் அமர்ந்திருப்பதால், உங்களுடைய சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த மாதம் முதல் பகுதி வரை ராகு செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் பொருத்தமான இடங்களில் சஞ்சரிக்கின்றன. எனவே எல்லா முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும். கண் மற்றும் உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில்ரீதியாக உங்கள் ஆளுமையைக் கண்டு போட்டி மற்றும் பொறாமை இரவு.
வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை தரிசித்து துளசி மாலை சாற்றலாம்
இதையும் படியுங்கள்:
கும்ப ராசியில் வக்கிரமாகும் சனி – எந்த ராசியினருக்கு எந்த விளைவுகளை ஏற்படுத்தும்..!
கடக ராசிக்கு ஏற்றமான காலம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்ற குருவுடன் செவ்வாய் சஞ்சரிப்பது மிகமிக ஏற்ற காலத்தை உணர்த்துகிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழக்குகளில் இருந்து பிரச்சினைகள் விலகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது உடல் நலக் கோளாறுகளை தவிர்ப்பதற்கு உதவும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகள் மட்டும் கூட்டுத் தொழிலில் தைரியமாக ஈடுபடலாம்.
வழிபட வேண்டிய தெய்வம்: சனிபகவான், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தடங்கல்கள் விலகி மேன்மை உண்டாகும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .