இந்தியா

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து – மக்கள் மீடியா-தமிழ்ச் செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | தமிழ் செய்திகள் நேரலை | தமிழ்நாடு செய்திகள் | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்


குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து .இராணுவ வீரர்கள் 14 பேர் ஹெலிகாப்டர்வெடித்து வீர மரணம்

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடந்த உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உட்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி புறப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் ஆய்வு.

அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்டனர். நாளை இவர்களது உடல் டெல்லிகொண்டு சென்று இறுதி மரியாதை நடத்தப்படும். இந்த இழப்பானது இந்தியாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *