கிரகநிலை:
ராசியில் சனி (வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.
இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
பலன்:
நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய மகர ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் ஒரு முறை பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குருவால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாக லாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.
பெண்களுக்கு எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் திடீரென அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.
திருவோணம்:
இந்த மாதம் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
அவிட்டம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
மேலும் படிக்க..
செப்டம்பர் மாதப் பலன்கள்:
மேஷம்
,
ரிஷபம்
,
மிதுனம்
,
கடகம்
,
சிம்மம்
,
கன்னி
,
துலாம்
,
விருச்சிகம்
,
தனுசு
,
மகரம்
,
கும்பம்
,
மீனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .