திரைவிமர்சனம்

டாப்ஸியின் ஹசீன் தில்ரூபா – ரத்தக்கறை படிந்த காதல் – News18 தமிழ்


திருமணமாகி வந்த சிறிது நாளில் கணவனை கொலை செய்ததற்காக இளம் பெண் ராணி கைது செய்யப்படுகிறாள்;. கொலை செய்யும் அளவுக்கு அவளது வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்த கேள்விக்கான பதில் ராணியின் பார்வையில் சொல்லப்பட, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது.

ராணியாக டாப்ஸி. டெல்லியைச் சேர்ந்த மாடர்ன் பெண். ஹீரோ மாதிரி கணவரை எதிர்பார்க்கிற அவருக்கு ஜவல்பூரில் எலெக்ட்ரில் என்ஜினியராக இருக்கும் சாதாரண ரிஷப்தான் கிடைக்கிறது. எலி மாதிரி பம்முகிற கணவரிடம் தாப்ஸி காட்டுகிற ஜம்பம் ரசிக்க வைக்கிறது. பாதி படத்துக்கு மேல் முதலில் பார்த்த டாப்ஸியை மறந்துவிடுகிறோம். அப்படியே உல்டா. சுயபச்சாதாபம், தீராக்காதல், போலீஸ் விசாரணையில் காட்டும் அழுத்தம் என ஒரேயடியாக மாறிப் போகிறார். அவர்தான் படத்தின் தூண், அஸ்திவாரம் எல்லாம்.

விளம்பரம்

டாப்ஸியின் கணவராக விக்ராந்த் மேசே. அக்மார்க் அப்பாவி. பெண் பார்க்க வந்த இடத்தில் ஃபேனை ரிப்பர் செய்கிறவரை வேறு எப்படி சொல்ல வேண்டும். இருபத்தியோராம், கட்டிய மனைவியிடம் நெருங்கவே தயங்குகிறவர்கள் இருக்கிறார்களா? மனைவியின் தவறு தெரிந்த பிறகு இன்னொரு விக்ராந்த் வெளியே வருகிறார். அப்பாவித்தனம் வழிந்த அதே கண்களில் வன்மத்தை பார்க்கையில் நமக்கே சுருக்கமாகிறது.

விக்ராந்தின் உறவினராக வரும் ஹர்ஷ்வர்தன் ரானேயின் என்ட்ரிக்குப் பிறகு யூகிக்க கூடிய திசையில் கதை நகர்கிறது. அவரது நெருக்கமும் விலகலும் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவைதான். போலீஸ் அதிகாரியாக வரும் ஆதித்ய ஸ்ரீவத்ஸா உள்ளிட்ட அனைவரும் உறுத்தலில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். விக்ராந்தின் அம்மாவாக வரும் யாமினிதாஸ் பார்வையிலேயே புன்னகைக்க வைக்கிறார். முதல் பாதியில் இழையோடும் நகைச்சுவைக்கு இவரே பொறுப்பு.

விளம்பரம்

நாள், நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்து நடத்தப்படும் திருமணங்களில் மனப் பொருத்தம் பின்தள்ளப்பட்டு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. குடும்பம் குறித்த புனிதத்தன்மை கேள்விக்குட்படுத்தாதவரை இது தொடரவே செய்யும். சமூகத்துக்குப் பயந்து விருப்பமில்லாத உறவில் தொடரும் போது ஏமாற்றங்கள், துரோகங்கள் தவிர்க்க முடியாதவை. இந்தத் திசையில் கதை பயணித்திருந்தால் இன்று பிரமாதமாக இருந்திருக்கும். சட்டென்று க்ரைமுக்குள் சென்று வேறு திசையில் படத்தை முடித்திருக்கிறார்கள்.

படத்தில் கிரேம் நாவல்கள் குறித்து ஆரம்பம் முதலே வருகிறது. நாவல்களின் வரிகளை தாப்ஸி பலமுறை மேற்கோள் காட்டுகிறார். கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தாலே அவர்கள் காட்டியிருக்கும் நூலைப் பிடித்து கிளைமாக்ஸை ஒருவரால் முன்பே யூகித்துவிட முடியும். க்ளைமாக்ஸ் ஆச்சரியத்தை தரும் என்று கதாசிரியர் கனிகா தில்லானும், இயக்குனர் வினில் மேத்யூவும் நினைத்திருந்தால், சாரி. குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் விக்ராந்தின் வீடும், அதையொட்டிய ஆறும். நகரத்தின் நடுவில் ஆற்றையொட்டி சாக்கடையும், குடிசைகளும் மட்டுமே பார்த்த கண்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

விளம்பரம்

மேற்கோள் படத்தில் காட்டும் நாவல் வரிகளில் சொன்னால், ஹசீன் தில்ரூபா ரத்தக்கறை படிந்த காதல். தாப்ஸிக்காக தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *