தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உள்ள மேதகு திரைப்படம் எவ்வாறு உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
இனம், கன்னத்தில் முத்தமிட்டால் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், ஃபேமிலி மேன் வரை இலங்கை தமிழர் குறித்து எந்த படத்தில் பேசினாலும், அது பெரும் பேச்சு பொருளாக மாறும். இலங்கை அரசியல் தமிழகத்தில் இப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, தனித்தமிழீழம் வேண்டி ஏறத்தாழ 30 ஆண்டுகள் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மேதகு திரைப்படம் தத்ரூபமாக பேச முயற்சி.
பிரபாகரனின் வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தை முதலில் பேசி உள்ள இந்த திரைப்படம், யாழ்ப்பாணத்தின் ஆளுநரை பிரபாகரன் கொலை செய்த படம் நிறைவடைகிறது. இலங்கையில் நடைபெற்று வரும் போருக்குப் பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக விளக்கும் பிரபாகரனின் ஆரம்பம், எந்த நிகழ்வுகள் அவரை பாதித்தது என்றும், எவ்வாறு அவர் விடுதலை இயக்கத்தை கட்டமைத்தார் என்றும் இந்த திரைப்படம் பேசியுள்ளது. குறும் பட இயக்குனரான கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணி பிரபாகரனின் தோற்றத்தின் செயல்பாடுகள் என அத்தனையும் ரசிகர்கள் கண் முன்னே விரியும் அளவிற்கு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
இலங்கை அதிபர்
பண்டாரநாயக்கா – செல்வா இடையே நடைபெற்ற பனிப்போர் குறித்து தெளிவாக பேசி உள்ள இந்த திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற போர் குறித்த தெளிவான அறிவிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
@ Google செய்திகளைப் பின்தொடரவும்:
கூகுள் செய்திகள்
பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே கிளிக்
செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை
உடனுடன் பெறுங்கள்.
மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் தொழில்நுட்பத்தில் படக்குழுவினர் காட்டியிருக்கும் நேர்த்தி,
நல்ல திரைப்படம்
உணர்வை பார்க்கும் ரசிகர்களுக்கு கடத்துகிறது. தெருக்கூத்து வடிவத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு கதை சொல்லும் முயற்சி திரைப்படம் ரசிகர்கள் பலருக்கும் புதுமையான அனுபவமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முழுக்க இலங்கை அரசியலை பேசி உள்ளதால் இந்தத் திரைப்படம் இந்திய ஒன்றியத்தில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை
இலங்கை போர்
குறித்த புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ளது. இலங்கை போர் குறித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யும் அடுத்த தலைமுறைக்கு மேதகு திரைப்படம் நல்ல வழிகாட்டு கையேடாக இருக்கும் என ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். பிஎஸ் மதிப்பு வலைதளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .