தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது
வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது . இன்றைய தங்கத்தின் விலை 1கிராமுக்கு ரூ3852 ஆகும். அதாவது சவரன் ஒன்றுக்கு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ30,656க்கு விற்பனையாகிறது . கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலையானது சவரன் ரூ.768 அதிகரித்துள்ளது.
நேற்றைய தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.3703க்கு விற்பனையானது. சவரன் ஒன்றுக்கு தங்கத்தின் விலை3,346க்கு விற்பனையானது. இன்று விலை குறையும் என்று எதிர் பார்த்த சூழலில் விலை உயர்வு மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை உயர்வைத் தான் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாகக் கூறப்பட்டது. 3௦,௦௦௦ உச்சத்தை பெற்றது பின் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் இப்போது நடுத்தர மக்களின் கனவாக மாறிப்போகும் அளவிற்கு புதிய உச்சத்தை பெற்றுள்ளது.