சினிமா

Tharbar Banned In High Court – தர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை – Makkal Media-Tamil News | ஆன்லைன் தமிழ் செய்திகள் | தமிழ் செய்திகள் நேரலை | தமிழ்நாடு செய்திகள் | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்


தர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

தர்பார் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர் பார்த்த சூழ்நிலையில் இன்று இந்த படத்திற்கு மலேசியாவைச் சேர்ந்த DMY உருவாக்கும் நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. லைக்கா நிறுவனம் எந்திரன் 2.௦ எடுக்கும் போது DMY உருவாக்கம் என்கிற நிறுவனத்திடம் இருந்து 20 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் அதற்காக வருட வருடம் 39 சதவிதம் வட்டி தருவதாகவும் லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது 23 கோடியே 70 லட்சம் வட்டியாக DMY கிரியேஷனிடம் லைக்கா நிறுவனம் திருப்பித்தர வேண்டும். ஆனால் இது வரை திருப்பித் தராததால். DMY creation சென்னை உயர் நீதி மன்றத்தில் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

. இந்த வழக்கை நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லைக்கா நிறவனத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் பதில் அளிக்க ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உள்ளார் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜ் ஜனவரி 2ஆம் தேதி பதில் அளிக்கிறார். இந்த பிரச்சனையால் தர்பார் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ளது

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:

இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *