மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 6-ல் உள்ள குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனை திரவியங்கள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு…